தொடர்ந்து 4-வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து 4வது நாளாக குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,822-க்கு விற்பனை ஆகிறது.

அதேபோல், வெள்ளி விலை 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.56-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

19.08.2022 gold Price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->