இன்னும் 15 நாட்களில் அதிமுக ஆட்சி... அதிமுக தொண்டர் மீது திமுக குண்டர்கள் தாக்குதல்... வெளியான கண்டன அறிக்கை! - Seithipunal
Seithipunal


அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "இரட்டை இலை பொருத்திய சைக்கிளோடு கழகக் கொடி ஏந்தி சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த அஇஅதிமுக-வின் எளிய தொண்டர் மீது நெற்குன்றம் பகுதி திமுக குண்டர்கள் தாக்குதல் நடந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

எங்கள் தொண்டர் மீது கைவைத்த குண்டர்களே… காலம் மாறிவிட்டது. இது ஸ்டாலின் காலமல்ல… எடப்பாடியார் காலம்! குற்றம் செய்யும் குண்டர்களை கூண்டேற்றும் காலம்!

இன்னும் 15 நாட்களில் அமையப்போகும் அதிமுக ஆட்சியில் இந்த திமுக ரவுடியிசம் முற்றுமாக ஒழியும் வகையில் கடும் நடவடிக்கை இருக்கும்.

அண்ணா திமுக தொண்டன் மீது, தமிழக மக்களின் உணர்வோடு கலந்திட்ட இரட்டை இலை மீது ஏன் கைவைத்தோம்? என இந்த குண்டர்கள் மட்டுமல்ல, அவர்களின் தலைவனான ஸ்டாலினும் வருத்தப்பட்டு அஞ்சி நடுங்கும் அளவிற்கு முறையான, கடுமையான சட்ட நடவடிக்கை இருக்கும் தமிழ்நாடு வாழ திமுக வீழவேண்டும்" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Condemn to DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->