17 வயது சிறுமி கர்ப்பம்: தூத்துக்குடியில் சைல்டு மேரேஜ் அம்பலம்... வாலிபர் மீது போக்சோ, பெற்றோர் 4 பேர் மீது வழக்கு...!
17 year old girl pregnant Child marriage scandal Thoothukudi POCSO case against teenager 4 parents
தூத்துக்குடியில் 18 வயது நிறைவடையாத சிறுமிக்குத் திருமணம் செய்து வைத்த சம்பவம், அவர் கர்ப்பமானதைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, சிறுமியைத் திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழும், இரு தரப்பைச் சேர்ந்த பெற்றோர் நான்கு பேர் மீது குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் கீழும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி விவேகானந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்குக் கடந்த ஜூன் 25-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அந்தச் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதுகுறித்த தகவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

சிறுமியின் வயது மற்றும் திருமணம் தொடர்பான விவரங்களை அறிந்த சமூக நலத்துறை அதிகாரி, இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், சிறுமிக்கு 18 வயது நிறைவடைவதற்கு முன்பே திருமணம் நடைபெற்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுமியைத் திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரைத் திருமணம் செய்த இளைஞரின் பெற்றோர் என இரு தரப்பையும் சேர்ந்த நான்கு பேர் மீது குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் திருமணம் நடைபெற்ற சூழல், அதற்கான ஏற்பாடுகள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையக் காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
17 year old girl pregnant Child marriage scandal Thoothukudi POCSO case against teenager 4 parents