சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள்; 16 உதவி மையங்கள் அமைப்பு..!
16 help centers set up in Chennai to clear doubts regarding special revision work on voter list
சென்னையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) தொடர்பான சந்தேகங்களை கேட்டறிய 16 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தற்போது தமிழ்நாடு உட்பட 09 மாநிலங்கள் மற்றும் 03 யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைப் பகுதியில் 22 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் கீழ்வரும் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலராகவுள்ளார்.
இராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேயில் உள்ள உதவி மையங்களை 044-25619523, 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள இதர 06 சட்டமன்றத் தொகுதிகளில் திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர் மற்றும் மதுரவாயல் ஆகிய 04 சட்டமன்றத் தொகுதிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட தேர்தல் அலுவலராகவுள்ளார்.
சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலராகவுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலக உதவி மைய எண் 044-29541715 ; 1950 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட தேர்தல் அலுவலராகவுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலக உதவி மைய எண் 044-27237107; 1950 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் வாக்காளர்கள், தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டுப் படிவம் தொடர்பாக சந்தேகங்கள் மற்றும் தகவல்களுக்கு மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புடைய சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் உதவி மைய எண்கள் மற்றும் கைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
English Summary
16 help centers set up in Chennai to clear doubts regarding special revision work on voter list