தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் 20-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பச்சேரி கிராமத்தில் நாளை (ஆகஸ்ட் 20-ந்தேதி) நடைபெற உள்ள ஒண்டிவீரன் 251-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டம்பர் 1-ந் தேதி நெற்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று (ஆகஸ்ட் 19-ந்தேதி) காலை 6 மணி முதல் 2-ந் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். 

எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டமாக செல்லாமல் சமூக இடைவெளியுடன் நான்கு நபர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

144 prohibition in thenkasi district from today


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->