தேனியில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு! ஆச்சர்யத்தில் ஆழ்த்திய தகவல்கள்! - Seithipunal
Seithipunal


கோவில் சுற்றுச்சுவர் பகுதியில் கிடைத்த கல்வெட்டுக்கள் பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் என தெரியவந்தது. 

தேனி: கோட்டூர் பேருந்து நிலையம் அருகே சித்திவிநாயகர் கோவில் உள்ள சுற்றுச்சுவர் பகுதியில் 2 கல்வெட்டுகள் வைகை தொல்லியல் பண்பாட்டு கழக நிறுவனர் பாவெல் பாரதி தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டனர். 

அது கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு என, அதில் உள்ள எழுத்துக்களை வாசித்ததில் தெரியவந்துள்ளது. மேலும் அதில் கோட்டூரின் பழைய பெயர் மாதேவநல்லூர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டு 31 அங்குலம் நீளமும், 17 அங்குலம் அகலமும், 9 அங்குலம் கனமும் கொண்டது. அந்த கல்வெட்டில் அளநாட்டைச் சேர்ந்த மாதேவநல்லூரில் தென்னடை பிரானார் கோவில் அகம்படி முதலிகளில் வடுகன் திருவாலி சீவலப்பன் என்ற வாசகம் தொடர்ச்சியின்றி காணப்பட்டது. 

தேனி அருகே பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு | Pandyar  inscriptions discovered near Theni

மேலும் கோட்டூரின் பெயர் கோட்டையூர் என்று இடம்பெற்றிருந்த மற்றொரு கல்வெட்டு கோவிலின் இடது புறம் இருந்தது. இந்த கல்வெட்டின் தொடக்கப்பகுதி சேதமடைந்து இருந்ததால் அதில் மன்னரின் பெயர், ஆட்சி குறித்து குறிப்பிட்டு இருக்கலாம். அதன் அருகே வடுவன் சீவலப்பன் நிலதானம் தொடர்பான செய்தி குறிப்பு உள்ளது. 

இது குறித்து பாவெல் பாரதி தெரிவிக்கையில்; அக்காலத்தில் பாண்டிய மன்னர்கள் கோவிலை நிர்மாணித்து அக்கோவிலுக்கு நிலங்களை தானமாக வழங்கியதை மையப்படுத்தி ஊர்களை உருவாக்கி, அதை நல்லூர் என அழைக்கப்பட்டன.

அது போல் இன்றைய கோட்டூரில் சிவன் கோவிலை நிர்மாணித்து பாண்டிய மன்னர்கள் அக்கோவிலுக்கு நிலம் தானம் வழங்கியதால் மாதேவநல்லூர் என்று பெயர் தோன்றியது. 

இந்த கல்வெட்டுகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள, தஞ்சாவூர் கல்வெட்டுக்கழகம் மற்றும் சென்னையில் உள்ள தொல்லியல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என தொல்லியல் பண்பாட்டு கழக நிறுவனர் பாவெல் பாரதி தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13th century inscriptions discovered


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->