இலங்கை சிறையில் இருந்து 12 தமிழக மீனவர்கள் விடுதலை .! - Seithipunal
Seithipunal


இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவர்கள் தமிழகம் வந்தனர். 

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த மாதம் 9-ம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 12 மீனவர்களையும் கைது செய்தனா். அவர்களை இலங்கைக்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்தது. அதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 12 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

12 மீனவர்களுக்கு அவசர கால சான்று வழங்கப்பட்டு, கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவா்களை வரவேற்று தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் ஏற்றி சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 Tamil Nadu fishermen released from Sri Lankan prison.


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->