அதிர்ச்சிச் செய்தி.. செங்கல்பட்டில் அடுத்தடுத்து உயிரிழந்த கொரோனா நோயாளிகள்.! ஆக்ஸிஜன் பற்றாக்குறையா.? - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்து 500 க்கு மேல் உள்ளது. இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் அங்கு சிகிச்சை பெற்று வந்த 11 கொரோனாநோயாளிகள் நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதனை தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து. அதன் பிறகு அவர் கூறுகையில், மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் கையிருப்பில் இருந்தது. இருப்பினும் எதிர்பாராதவிதமாக உயிரிழப்பு ஏற்பட்டுவிட்டது. 11 பேர் உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 corona patients death in chengalpattu hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->