10-ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு எப்போது? - வெளியானது அதிகாரபூர்வ தகவல்.! - Seithipunal
Seithipunal


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறை தேர்வுகள் வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை, செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

“2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட (Science Practical Examinations) செய்முறை தேர்வுகள் வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை தேர்வெழுதி அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை தேர்வில், தவறாமல் கலந்து கொண்டு தேர்வை எழுதிட வேண்டும்.

அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் தங்கள் முகவரிக்கு கிடைக்கப் பெறாதவர்கள் இந்த அறிவிப்பை தெரிந்துகொண்டு, அறிவியல் பாட செய்முறை தேர்வில் தவறாமல் கலந்து கொள்ள, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரை தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th public practical exam date announce


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->