ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.10,000 கோடி முறைகேடு...? - தணிக்கை அறிக்கையைச் சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் ஆவேசம்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையை சுட்டிக்காட்டி பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தமிழகத்தில் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட ஸ்மார்ட் சிட்டி பணிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் மத்திய அரசால் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டது.தமிழகத்திலும் பல்வேறு மாநகராட்சிகளில் இத்திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், 2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை என கணக்கு தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.மாநகராட்சிகளின் சொந்த நிதியில் மேற்கொள்ள வேண்டிய சில பணிகளுக்கும் ஸ்மார்ட் சிட்டி நிதி பயன்படுத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால், நகரங்களின் சிறப்பு மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படை நோக்கமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரத்தில் முக்கிய அதிர்ச்சியாக, ரூ.1,602.20 கோடி மதிப்பிலான 52 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாநகராட்சிகளின் சொந்த நிதியில் மேற்கொள்ள வேண்டிய ரூ.21.42 கோடி மதிப்பிலான 5 பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதோடு விவகாரம் முடிந்துவிடவில்லை என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உரிய அனுமதி பெறாமல் சில பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அரசு விளம்பரங்களுக்காக நிதி பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அரசு அலுவலகங்களின் பயன்பாட்டுக்காக கார்கள், தளபாடங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்பட்டதாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒவ்வொரு விவரமாக வெளிவரும் விதிமீறல்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி அரசியல் நடத்துபவர்கள், தற்போது வெளியாகியுள்ள கணக்கு தணிக்கை அறிக்கையை கவனிக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சிக்காக மத்திய அரசு பெருமளவில் நிதி வழங்கியிருந்தும், அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தற்போது எழுந்துள்ள கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அந்த பதிவில் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10000 crore fraud Smart City project Vanathi Srinivasan furious pointing audit report


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->