பவானிசாகர் அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து - 10 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


பவானிசாகர் அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து பயணிகளுடன் தனியார் சொகுசு பேருந்து ஒன்று பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 injured Private luxury bus overturns near Bhavani sagar erode


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->