தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே கோர விபத்து; பைக் மீது வேன் மோதி, குழந்தைகள் உள்பட 05 பேர் பலி..!
05 people including children killed in a van collision with a bike in Thoothukudi
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளாத்திகுளம் அருகே சுற்றுலா வேன் ஒன்றுடன் பைக் நேருக்கு நேர் மோதியதில், இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே பைக்கில் சென்ற 02 குழந்தைகள் உள்பட 05 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பல்லாகுளம் கிராமத்தை சேர்ந்த குருசாமி (40), முத்துலட்சுமி (48), முகில் (05), சுமித்ரன் (03) மற்றும் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
தகவல் அறிந்த குளத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்துக்கு காரணமான வேன் ஓட்டுநரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
05 people including children killed in a van collision with a bike in Thoothukudi