இன்ஸ்டாகிராம் Video Call: இளம்பெண் தற்கொலையில் சிக்கிய கடிதம்: நண்பர்களுடன் மிரட்டி உல்லாசத்திற்கு அழைத்த 03 பேர் கைது..!
03 people arrested in connection with the suicide of a young woman in Alankulam who was addicted to video calls on Instagram
இன்ஸ்டாகிராமில் பழகிய நகர் தனது வீடியோ வெளியிட்டதால், ஆலங்குளத்தில் இளம்பெண் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் மீனாட்சிபுரம் தெருவைச் சேர்ந்தவர் பிரேம் சரண். இவரது மனைவி முத்துலட்சுமி. வயது 26. 07 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. ஆனாலும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
கணவன் பிரேம் சரண் ஆலங்குளத்தில் உள்ள அரசு குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனைவி முத்துலட்சுமியின் நடத்தையில் மாற்றம் காணப்பட்டது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக முத்துலட்சுமி அதே பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்த நிலையில், நேற்று காலையில் அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஆலங்குளம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன், வகைக்கு பதிவு செய்து இளம்பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகியுள்ளன. அதாவது, முத்துலட்சுமிக்கும், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற 32 வயதுடைய வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளதும், அதைத் தொடர்ந்து அவர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
சக்திவேல் ஆலங்குளத்தில் உள்ள ஒரு டிராக்டர் ஓர்க்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். இதனையடுத்து, உறவினர்கள் முத்துலட்சுமியை கண்டித்துள்ளனர். அதனால் அவர் சக்திவேலிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சக்திவேல் வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து முத்துலட்சுமியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து முத்துலட்சுமி தனது பெற்றோரிடம் தகவல்களை தெரிவித்துள்ளார். அடுத்ததாக அவரது பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் சக்திவேலை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் வாலிபர், இளம்பெண்ணுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை அழித்துள்ளனர்.

ஆனால் சக்திவேல் தனது மனைவியின் செல்போனில் மறைத்து வைத்திருந்த முத்துலட்சுமியின் படங்களை ஓர்க்ஷாப்பிற்கு அடிக்கடி வரும் மருதம்புத்தூரை சேர்ந்த முத்துராஜ் (36) என்பவருக்கு பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (42) என்பவரும் சேர்ந்து கொண்டு, சம்பந்தப்பட்ட இளம்பெண்ணை தங்கள் ஆசைக்கும் இணங்குமாறு தெரிவித்துள்ளனர். அத்துடன், அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியுள்ளது.
இதனால் வாழ்க்கையே வெறுத்துப் போன முத்துலட்சுமி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பெண்ணின் தற்கொலைக்கு காரணமான சக்திவேல், முத்துராஜ், முருகேசன் ஆகிய 03 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முத்துலட்சுமி எழுதிய உருக்கமான கடிதமும் சிக்கியுள்ளது. அதில் அவர் 08 பக்கங்களில் தனது தற்கொலைக்கு சக்திவேல், முத்துராஜ், முருகேசன் ஆகிய 03 பேர் காரணம் என கூறியுள்ளதோடு, பணம் கேட்டு மிரட்டியதால், தான் எவ்வளவு பணத்தை இழந்துள்ளேன் என்பதையும் தெரிவித்துள்ளார். தன்னை எப்படியெல்லாம் துன்புறுத்தினார்கள் என்பது குறித்தெல்லாம் அதில் கூறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
03 people arrested in connection with the suicide of a young woman in Alankulam who was addicted to video calls on Instagram