சிக்ஸர் மன்னன்... பேட்டிங், பௌலிங், பீல்டிங்கில் அசத்தியவர்... யார் இவர்?! - Seithipunal
Seithipunal


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்:

இந்திய அணியில் சிறந்த ஆல்-ரவுண்டர் பேட்ஸ்மேனாக வலம் வந்தவர்...

பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அசத்தி தொடர் நாயகன் விருதை பெற்றவர்..

ஆறு பந்திலும் ஆறு சிக்ஸர்களை பறக்க விட்டவர்.

சிக்ஸர் மன்னன் என அழைக்கப்படுபவர்.

இந்திய அணிக்கு மிகப்பெரிய தூணாக இருந்தவர்.

கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்.

யுவராஜ் சிங்:

பிறப்பு : 

யுவராஜ் சிங் 1981ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிறந்தார். யுவராஜ் சிங் தனது 13வது வயதில் பஞ்சாப் அணிக்காக களமிறங்கினார். 

டென்னிஸ் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் ஆகியன இவரது குழந்தை பருவத்தில் மிகவும் பிடித்த விளையாட்டுகளாக இருந்தன. இந்த இரண்டிலும் சிறப்பாக விளையாடும் திறனைக் கொண்டிருந்தார்.

குடும்பம் : 

இவரின் தந்தையான யோகிராஜ் சிங் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். இவரின் தாய் ஷப்னம் சிங் ஆவார். 

2016ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி யுவராஜ் சிங், ஹசல் கீச் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சாதனைகள் : 

2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடிய கடைசி லீக் ஆட்டத்தில் எல்லோரும் சொதப்ப, தனி ஆளாக நின்று விளையாடி சதம் அடித்து அணிக்கும் நம்பிக்கை ஊட்டியதோடு, இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார். 

யுவராஜ் சிங் என்றாலே நம் அனைவருக்கும் குறிப்பாக நினைவில் வருவது 2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் ஆறு பந்திலும் ஆறு சிக்ஸர்களை பறக்க விட்டது தான்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில், களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதையும் வென்றார். 

யுவராஜ் சிங் பேட்டிங் மட்டுமல்லாது பௌலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினார். இதனால் இந்திய அணியில் மட்டுமல்லாது ரசிகர்களின் மனதிலும் தமக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.

பிரபலமான ஷாட்கள் : 

ஃபுல் ஷாட், பிளிக் ஷாட், கவர் டிரைவ் மற்றும் கட் ஷாட் இவரது பிரபலமான ஷாட்கள். மண்டியிட்டு அடிக்கும் சிக்ஸர்கள் எந்தவொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் மகிழ்ச்சியை தரும். சுழற்பந்து வீச்சில் இறங்கி வந்து அடிக்கும் ஷாட்கள் மற்றும் பலவகையான கிளாசிக் ஷாட்கள் என பேட்டிங்கில் அதிரடி ஆட்டத்தின் மூலம் சிறந்த பந்து வீச்சாளர்களை கூட நிலைகுலைய செய்தவர் யுவராஜ் சிங். 

விருது : 

யுவராஜ் சிங்கிற்கு 2012ஆம் ஆண்டில் இந்திய அரசால் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விளையாட்டு விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 

2014ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடியுரிமை விருதான பத்மஸ்ரீ இவருக்கு வழங்கப்பட்டது.

ஓய்வு :

2019ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி யுவராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YUVARAJ SINGH HISTORY


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal