WPL ஏலம் வெடித்தது! தீப்தி சர்மா ₹3.20 கோடிக்கு ஏலம்.. வரலாறு படைத்த நிமிடம்...!
WPL auction explodes Deepti Sharma auctioned for 3point20 crore moment that created history
அடுத்த ஆண்டு ஜனவரி 9 முதல் பிப்ரவரி 5 வரை நவி மும்பை மற்றும் வதோதரா மைதானங்களை சூடுபிடிக்க வைக்கும் 4வது பெண்கள் பிரீமியர் லீக் (WPL) டி-20 கிரிக்கெட் தொடர் வரவிருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு வீராங்கனைகள் ஏலம் நேற்று டெல்லியில் அதிரடியாக ஆரம்பமானது.

194 இந்திய மற்றும் 83 வெளிநாட்டு வீராங்கனைகள் மொத்தம் 277 நட்சத்திரங்கள் ஏல மேடையில் காத்திருந்தன. ஏல ஹாமரை கையாள்ந்தவர் பிரபல ஏல அதிகாரி மல்லிகா சாகர், விறுவிறுப்பாக நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார்.தற்கால சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், முன்னாள் கோப்பையை தூக்கிய பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், அதனுடன் மற்ற மூன்று அணிகளும் தங்களுக்கான சரியான திறமைகளை வேட்டையாடும் வேகத்தில் ஏலம் ஏந்தின.
சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் தொடரின் சிறந்த வீராங்கனை பட்டம் பெற்று இந்தியர்களின் கண்களில் நட்சத்திரமாக விளங்கிய தீப்தி சர்மாவுக்கு ஏல மேடையில் சூடு ஏறியது. ரூ.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலை மின்னல் வேகத்தில் கடந்து, இறுதியில் UP Warriors அணி RTM கார்டை (Right To Match) பயன்படுத்தி ரூ.3.20 கோடிக்கு தட்டிச்சென்றது.
இதனால் WPL வரலாற்றில் அதிக விலைக்கு சென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற கௌரவத்தையும் தீப்தி கைப்பற்றினார்.அவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் அமெலி கெர் ரூ.3 கோடி என்ற சாதனைக் கூட்டிலும் உயர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார்.
அதே நேரம் மற்ற அணிகளும் பின்தங்கவில்லை
இந்திய ஆல்-ரவுண்டர் ஷிகா பாண்டே → UP Warriors (₹2.40 கோடி)
நியூசிலாந்தின் சக்திவாய்ந்த சோபி டிவைன் → Gujarat Giants (₹2 கோடி)
ஆஸ்திரேலிய செம்மை பேட்டர் மேக் லானிங் → UP Warriors (₹1.90 கோடி)
இந்தியாவின் ஸ்ரீ சரனி,
வெஸ்ட் இண்டீஸ் ஸ்மாஷர் சின்லி ஹென்றி → தலா ₹1.30 கோடி
தென்னாப்பிரிக்க தொடக்க குண்டு லாரா வோல்வார்ட்ட் → Delhi Capitals (₹1.10 கோடி)இந்நிலையில் ஆட்டம் தலைகீழாகும் என எதிர்பார்க்கப்பட்ட சில நட்சத்திரங்களை எந்த அணியும் கைப்பற்றாததே பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. Alice Capsey, Alyssa Healy, Alana King, Laura Harris, Heather Knight, Amy Jones உள்ளிட்ட உலகின் முன்னணி வீராங்கனைகள் ஏலக் கட்டத்தில் விற்பனையில்லாமல் மீணட்பது சலசலப்பை ஏற்படுத்தியது.
English Summary
WPL auction explodes Deepti Sharma auctioned for 3point20 crore moment that created history