தொடங்கியது உலகக்கோப்பை திருவிழா! முதல் போட்டியிலே சாதனையுடன் களமிறங்கும் கேப்டன்!  - Seithipunal
Seithipunal


12 ஆவது உலக கோப்பை தொடர் சற்றுமுன் இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. ஏறக்குறைய ஒன்றரை மாதங்கள் நடைபெறவுள்ள இப்போட்டி தொடரில், முதல் போட்டியில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியும், தென் ஆப்பிரிக்கா அணியும் மோதுகின்றன. 

1992 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தப் ஊட்டி தொடரானது ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படுகிறது.  அதாவது ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் நிச்சயமாக ஒரு போட்டியில் ஆட வேண்டும் என்பதே, ரவுண்ட் ராபின் முறையாகும்.

இந்த போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் தென் ஆபிரிக்காவும் களமிறங்கி உள்ளனர். டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிலிஸிஸ் முதலில் பந்து வீசுவதாக தெரிவித்துள்ளார். அந்த அணியில் நம்பிக்கை வீரர், மூத்த வீரர் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயம் காரணமாக இப்போட்டியில் களம் இறங்கவில்லை. 

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அந்த அணியில் காயத்தில் இருந்து அனைத்து வீரர்களும் மீண்டு விட்டதாக கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு இது 200-வது ஒருநாள் போட்டி ஆகும். இதன் மூலம் அதிக ஒருநாள் போட்டிகளில் ஆடிய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவருக்கு முன் அதிகபட்சமாக தற்போதைய துணை பயிற்சியாளர் பால் காலிங்வுட் 197 போட்டிகளில் ஆடியுள்ளார். 

சவுத்  ஆப்பிரிக்கா அணி : ஹாசிம் ஆம்லா, குய்ந்தோன் டி காக்(w), ஐடென் மார்க்ரம் , டு பிளெஸ்ஸிஸ்(c), வான் டெர் டுசென், ஜான் பால்  டுமினி, ஆண்டிலே பலுக்குவாயா, டிவைன் பிரிடோரிஸ், காகிஸோ  ரபாடா, லுங்கி நிகிடி, இம்ரான் தாஹிர்.  

இங்கிலாந்து அணி: ஜேசன் ராய், ஜொன்னி பைர்ஸ்டாவ், ஜோ ரூட், ஏயின் மோர்கன்(c), பெண் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(w), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், லியாம் ப்ளென்கேட், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

world cup 2019 opening match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->