மகளிர் டி20 உலகக்கோப்பை.. வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்திய அணிக்கு 2வது வெற்றி.! - Seithipunal
Seithipunal


8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது.

அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் 'பி' பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி தனது 2வது லீக் போட்டியில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியில் மாற்றம்

இந்திய அணியில் கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடதா ஸ்மிருதி மந்தானா விளையாடுகிறார்.

இந்திய அணிக்கு 119 ரன்கள் இலக்கு

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய தீப்தி ஷர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் இந்திய அணி இந்த உலகக்கோப்பையில் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனையடுத்து பி பிரிவில் 4 புள்ளிகளுடன் இந்திய அணி 2வது இடத்தை பிடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens T20 World Cup India won by 6 wickets against West Indies


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->