பாகிஸ்தானுக்கு செக் வைக்குமா ஐ.சி.சி...? - கவாஸ்கரின் அதிரடி 'பஞ்ச்'...! - Seithipunal
Seithipunal


20 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுடன் மோதத் தயங்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) பிடிவாதமான போக்கிற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், புகழ்பெற்ற வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் குரல் எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அதிரடி பார்வையைப் பதிவு செய்துள்ளார்."ஒரு மாபெரும் தொடரின் கடைசி தருணத்தில் நீங்கள் (பாகிஸ்தான்) விலகுவதாக அறிவிப்பது என்பது விளையாட்டின் மாண்பையே சீர்குலைக்கும் செயலாகும். தொடர் தொடங்குவதற்கு வெகு காலத்திற்கு முன்பே நீங்கள் விலகியிருந்தால் அது வேறு விஷயம்.

ஆனால், போட்டிகள் நெருங்கும் வேளையில் தன்னிச்சையாக விலகுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.இக்கட்டான கடைசி நேரத்தில் விலகும் அணிகள் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது என்ன மாதிரியான தண்டனை என்பது ஐ.சி.சி-ன் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றாலும், இதில் பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் மற்றும் வணிக நலன்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், இது ஒரு தனிப்பட்ட முடிவாக இருக்கக் கூடாது.

எதிர்காலத்தில் வேறு எந்த நாடும் இது போன்ற 'விளையாட்டுத் தர்மத்திற்கு' எதிரான முடிவை எடுக்கத் துணியாத வகையில், ஐ.சி.சி-ன் நடவடிக்கை ஒரு கடுமையான முன்னுதாரணமாக அமைய வேண்டும்.

இல்லையெனில், அரசியல் காரணங்களை முன்வைத்து விளையாட்டைப் புறக்கணிப்பது என்பது ஒரு தவறான கலாச்சாரமாக மாறிவிடும்," என கவாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will ICC put check Pakistan Gavaskar sensational punch


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->