பும்ராவை பாக்கும் போது அப்படியே அந்த பாகிஸ்தான் ஜாம்பவான் வசீம் அக்ரம் போல் இருக்கிறார் – முன்னாள் இலங்கை வீரர் பாராட்டு!
When you look at Bumrah he looks just like that Pakistani legend Wasim Akram former Sri Lankan player praises
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா, மூன்று வடிவங்களிலும் அணியின் முக்கிய வீரராக விளையாடி வருகிறார். அண்மைக் காலமாக காயம் காரணமாக சில தொடர்களில் தவிர்க்கப்பட்டாலும், தற்போது அவர் முக்கியமான தொடர்களிலேயே பங்கேற்கிறார். அதன்படி, வரவிருக்கும் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா இடம் பெற்றுள்ளார். இருப்பினும், அவர் முக்கியமான போட்டிகளில் மட்டுமே களம் காண்பார் என தெரிவிக்கப்படுகிறது.
பும்ராவின் பந்துவீச்சு திறமையை இலங்கை அணியின் முன்னாள் வீரர் பர்வேஸ் மஹரூப் பாராட்டியுள்ளார். முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரமை ஒப்பிட்டு அவர் கூறியதாவது:
"ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது உலகின் மூன்று வடிவங்களிலும் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக திகழ்கிறார். அதற்கு அவரது வித்தியாசமான பௌலிங் ஆக்சனே முக்கிய காரணம். 2013–14 சாம்பியன்ஸ் டிரோபி தொடரில் நான் முதன்முதலாக பும்ராவை பார்த்தேன். அப்போது இன்ஸ்விங் பந்துகளை மட்டுமே வீசினார். ஆனால் தற்போது அவுட் ஸ்விங், யார்க்கர், ஸ்லோ பால் போன்ற பல்வேறு வேறுபாடுகளை அவர் கொண்டுள்ளார்.
இதன் காரணமாகவே உலகின் 90% பேட்ஸ்மன்களும் பும்ராவை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். எந்த பேட்ஸ்மனும் அவருடைய பந்துவீச்சை எளிதாக எதிர்கொள்வது சாத்தியமில்லை. பாகிஸ்தானின் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தனது உச்சத்தில் இருந்தபோது பேட்ஸ்மன்கள் எவரும் அவருக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அதேபோல், தற்போது பும்ராவும் தனது ப்ரைம் பார்மில் உள்ளார்.
அவருக்கு அவ்வப்போது காயம் ஏற்பட்டாலும், மீண்டும் திரும்பும் போதெல்லாம் அதிரடியாக விளையாடுகிறார். இன்னும் சில ஆண்டுகள் இதேபோல் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன்," என்று மஹரூப் பாராட்டியுள்ளார்.
English Summary
When you look at Bumrah he looks just like that Pakistani legend Wasim Akram former Sri Lankan player praises