நேற்றைய போட்டியில் சதமடித்து சாதனை படைத்த விராட் கோலி.!! 
                                    
                                    
                                   virat kohli 100 catches in test match
 
                                 
                               
                                
                                      
                                            இந்திய கிரிக்கெட் அணியின் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1 - 1 என சமநிலையில் உள்ளது. 
தற்போது இந்திய - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 223 ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து, தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் பவுமாவை கேட்ச் பிடித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவுட் ஆக்கினார். இது அவரது 100வது கேட்ச் ஆகும். விராட் கோலி 99 டெஸ்டில் 168 இன்னிங்சில் 100 கிராம் பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 100 கேட்ச் பிடித்த ஆறாவது வீரர் விராட் கோலி அவர். 
இதுவரை ராகுல் டிராவிட் 209 கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார். வி வி எஸ் லட்சுமணன் 135, டெண்டுல்கர் 115, கவாஸ்கர் 108,அசாருதீன் 105 கேட்ச் பிடித்து அடுத்தடுத்து நிலையில் உள்ளனர். இந்தப் பட்டியலில் விராட் கோலியும் தற்போது இணைந்துள்ளார்.
 
                                     
                                 
                   
                       English Summary
                       virat kohli 100 catches in test match