டி20-யில் வரலாறு படைக்க காத்திருக்கும் வருண் சக்கரவர்த்தி!இன்னும் ஒரு விக்கெட் போதும்..– விவரம் இதோ - Seithipunal
Seithipunal


தமிழகத்தை சேர்ந்த மர்ம சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, 2019 ஐபிஎல் தொடரில் அறிமுகமான நாள் முதல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தவர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இதுவரை 84 போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை வேட்டையாடியவர், 2021 இல் இந்திய டி20 அணியில் இடம் பிடித்தார்.

ஆனால் ஆரம்பக் கால சர்வதேச வாய்ப்புகளில் மோசமான ஃபார்மால் சில போட்டிகள் ஆடியவுடன் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதை ஜீவன்கோடாய் எடுத்துக்கொண்ட வருண், மீண்டும் ஐபிஎல் மேடையில் ஆளுமையை காட்டி தனது கம்பேக்கை உறுதி செய்தார்.

இந்தியா அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பு ஏற்ற பின், மீண்டும் டி20 அணியில் வாய்ப்பு பெற்ற வருண், இரண்டாவது இன்னிங்ஸில் அசத்தலாக விளையாடி இப்போது 2026 டி20 உலகக்கோப்பையின் முக்கிய ஸ்பின்னர் எனப் பார்க்கப்படுகிறார்.

மேலும், 2025ல் ஒடிஐ அறிமுகமான அவர் இதுவரை நான்கு ஒருநாள் ஆட்டங்களில் 10 விக்கெட்டுகள் எடுத்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.

வருண் சக்கரவர்த்தி இதுவரை 31 சர்வதேச டி20 போட்டிகளில் 49 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.அதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இன்னும் ஒரு விக்கெட் மட்டும் எடுத்து விட்டால்— அவரது சர்வதேச டி20 வாழ்க்கையின் 50-வது விக்கெட்டை பூர்த்தி செய்வார். இந்த சாதனையை மிக விரைவாக நிகழ்த்தும் இந்திய மர்ம ஸ்பின்னர்களில் ஒருவராக வரலாற்றில் இடம் பிடிப்பார்.

அடுத்த ஆட்டத்தில் இந்த முக்கிய மைல்கல்லை எட்ட வருண் காத்திருக்கையில், இந்திய ரசிகர்களும் அதே உளர்வுடன் அவரை பாராட்டத் தயாராக உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Varun Chakravarthy is waiting to create history in T20 One more wicket is enough Here are the details


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->