U19 உலகக்கோப்பை வெற்றி… சச்சினின் ஜெர்சி பரிசு: ஆயுஷ் மாத்ரேவுக்கு மறக்க முடியாத தருணம்! - வைரல் வீடியோ
U19 World Cup won Sachin jersey gift unforgettable moment Ayush Madre Viral Video
ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய இளம் படை வரலாற்று சாதனை படைத்துள்ளது.

உற்சாகம் கொந்தளித்த இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி கிரிக்கெட் உலகில் மீண்டும் தன் ஆதிக்கத்தை நிரூபித்தது.
பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் ஆட்டத்தை கட்டுக்குள் வைத்த இந்திய அணி, ஆரம்பம் முதலே வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறியது.
இந்த வெற்றி, ‘இளம் இந்தியாவின் சக்தி’ என ரசிகர்களால் பாராட்டப்பட்டது.சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில், கேப்டன் ஆயுஷ் மாத்ரே கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
அப்போது, தனது கடைசி சர்வதேச தொடரில் அணிந்திருந்த ஜெர்சியை சச்சின், அன்புப் பரிசாக மாத்ரேவுக்கு வழங்கியது அந்த தருணத்தை மேலும் உணர்ச்சிப்பூர்வமாக மாற்றியது.
‘மாஸ்டரிடம் இருந்து மரியாதை… இளம் கேப்டனுக்கு மறக்க முடியாத நினைவு!’ என ரசிகர்கள் கொண்டாட, இந்த சந்திப்பு தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
English Summary
U19 World Cup won Sachin jersey gift unforgettable moment Ayush Madre Viral Video