முல்லைப் பெரியாறு ஆற்றில் புதிய அணை.. கேரளா அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


முல்லைப் பெரியாறு ஆற்றில் புதிய அணை கட்டப்போவதாக ஆளுநர் உரையில் கேரள அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 142 அடி வரை முல்லைப்பெரியாறில் தண்ணீர் தேக்குமளவிற்கு அணை வலுவாக இருப்பதாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய நிலையில், அதனை ஏற்க மறுக்கும் வகையில் கேரள ஆளுநர் உரையாற்றியிருப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். 

காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளில் தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகளைக் காவுகொடுத்த தி.மு.க, முல்லைப்பெரியாறு விவகாரத்திலும் கோட்டை விட்டுவிடக்கூடாது. தி.மு.கவின்  கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி கேரளாவில் நடப்பதால்
முல்லைப் பெரியாறிலிருந்து தண்ணீர் திறக்கும் தமிழகத்தின் 124 ஆண்டுகால உரிமையை சமீபத்தில் பறிகொடுத்ததைப் போல புதிய அணை கட்டவும் அனுமதித்துவிடக்கூடாது. எனவே, இது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதியாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran statement for new dam on mullaiperiyar river


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->