CSK vs LSG : இன்றைய போட்டிக்கான சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள்.? - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. 

இந்நிலையில். இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளும் மோதுகிறது. இந்த போட்டிக்கான சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. துவக்க வீரர்கள் வரிசையில் எந்த மாற்றமும் இருக்காது. டேவன் கான்வே மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள். 

மிடில் ஆர்டரில் ஒரு மாற்றத்துடன் சென்னை அணி களமிறங்கியது. இந்த போட்டியில் மொய்ன் அலி இணைகிறார். மொய்ன் அலி மூன்றாவது இடத்திலும், ராபின் உத்தப்பா மற்றும் அம்பத்தி ராயுடு 4 மற்றும் 5வது இடத்திலும் களமிறங்குவது. ஆல்ரவுண்டர் வரிசையில் ரவீந்திர ஜடேஜா, பிராவோ ஆகியோர் களம் இறங்குவார்கள். மொய்ன் அலி அணியில் இணைந்துள்ளதால்  மிட்செல் சாட்னர்  அணியில் இருந்து நீக்கப்படுவார். அதே போல் சிவம் துபேவிற்கும் இந்த போட்டிக்கான அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. 

பந்து வீச்சாளர்கள் வரிசையில் ராஜவர்தன் ஹங்ரேக்கருக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. அதேபோல ஆடம் மில்னே, துசார் தேஸ்பாண்டே ஆகியோர் இந்த போட்டிக்கான சென்னை அணியில் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள். 

சென்னை அணியின் உத்தேச பட்டியல் : 

டேவன் கான்வே மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட், மொய்ன் அலி, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, பிராவோ, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஆடம் மில்னே, துஷார் தேஷ்பாண்டே.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today CSK vs LSG Match


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->