ஐபிஎல் வரலாற்றில் ஆல்-டைம் சாதனையை சமன் செய்த கில் - சாய் சுதர்சன் ஜோடி; பார்ட்னர்ஷிப்பில் புதிய மைக்கல்..! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி, வெறும் 8.1 ஓவர்களில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தொடக்க விக்கெட்டுக்கு அதிக முறை 100 ரன்களுக்கு மேல் சேர்த்த ஜோடி என்ற ஆல்-டைம் சாதனையை (All-time record) இவர்கள் சமன் செய்துள்ளனர்.

கில் - சாய் சுதர்சன் ஜோடி இதுவரை 06 முறை நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்துள்ளது. இதற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க இணைகளான டேவிட் வார்னர் - ஷிகர் தவான் மற்றும் அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் ஆகிய ஜோடிகள் தலா 6 முறை இந்தச் சாதனையைப் படைத்திருந்தனர். அந்த ஜாம்பவான்களின் வரிசையில் தற்போது கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடியும் இணைந்துள்ளனர்.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் காயம் காரணமாக விளையாடாததால் இவருக்கு பதிலாக தற்காலிக கேப்டனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் செயல்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Gill and Sai Sudharsan duo equals the all time partnership record in IPL history


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->