இந்த லிஸ்ட்ல நம்ம ஷேவாக் தான் முதலிடம்! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் 2023 டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 182 பந்துகளில் 189 ரன்கள் விளாசியதுதான், குறைந்த பந்துகளில் எடுத்த அதிக ரன் என்ற தவறான தகவல் பரவி வருகிறது.

ஜாக் கிராலி 182 பந்துகளில் 189 ரன்கள் அடித்தது ஆஷஸ் டெஸ்ட் தொடரின் சாதனை மட்டும்தான். அது டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிகபட்ச சாதனை இல்லை.

அப்படி சாதனை புரிந்தவர்கள் பட்டியல் ஏராளம். அதில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போன நம் வீரேந்திர ஷேவாக்கிற்கு என்றுமே முதலிடம் தான்.

2007-08 டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் சென்னையில் நடந்தது. அதில், விரேந்திர சேவாக்  319 பந்துகளை 304 பந்துகளில் எடுத்து அசத்தியிருந்தார்.

பின்னர் 2009-10 தொடரில் இலங்கைக்கு எதிராக ஆட்டத்தில் 254 பந்துகளில் 293 ரன்களை விளாசினார் விரேந்திர சேவாக்.

லாகூரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சேவாக் 247 பந்துகளில் 254 ரன்கள் எடுத்திருந்தார்.

2003-04 பாக்சிங் டெ டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 25 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 233 பந்துகளில் 195 ரன்கள் எடுத்தார் சேவாக் . 

ஷிகர் தவான் : 2017-ல் இலங்கைக்கு எதிரான் ஆட்டத்தில்168 பந்துகளில் 190 ரன்களை எடுத்திருந்தார் ஷிகர் தவான்.


மற்ற அணி வீரர்கள் :

2015-16 தொடரில் இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் 198 பந்துகளில் 258 ரன்களை விளாசி உள்ளார்.

நியூசிலாந்தின் நேதன் ஆஸ்ட்ல் 168 பந்துகளில் 222 ரன்களை விளாசி, இங்கிலாந்து அணியை கதறவிட்டுள்ளார்.

பிரெண்டன் மெக்கல்லம் : 2014-ல் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் ஒன்றில் நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கல்லம் 188 பந்துகளில் 202 ரன்களை விளாசினார். 

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 134 பந்துகளில் 135 ரன்களை விளாசி இருந்தார் பிரெண்டென் மெக்கல்லம்.


(2014 இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் சுமார் 600 பந்துகளில் 302 ரன்களை கிட்டத்தட்ட இரு நாட்கள் (3வது பாதியிலிருந்து 5வது நாள் பாதிவரை) ஆடி எடுத்தார் பிரெண்டென் மெக்கல்லம்)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Test cricket low ball high score list


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->