INDvsWI :இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றம்.. முக்கிய வீரர் நீக்கம்.? - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை விழுத்தி அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில், இரண்டாவது போட்டியில் இன்று இரு அணிகளும் மோதுகின்றன. இந்த போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் இந்த போட்டியில் துணை கேப்டன் கே எல்  ராகுல் மீண்டும் அணியில் இணைய உள்ளார். இதனால், இன்றைய போட்டியில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

இந்திய அணியின் உத்தேச பட்டியல் : ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்) சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சஹால், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

team india playing xi change


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->