டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! இன்று ஒரே நாளில் இரு ஆட்டங்கள்.!
t20 world cup men 1st match
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று (அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி) தொடங்க உள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை டி20 தொடர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ளது.

இந்த டி20 போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி குரூப்-2 ல் இடம் பெற்றுள்ளது. இந்த குரூப் இரண்டில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் ஒன்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த 8 அணிகளும் நேரடியாக இரண்டாவது சுற்றில் இருந்து விளையாடும்.

முதல் சுற்று தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இந்த தகுதி சுற்று போட்டியில் இலங்கை, வங்காளதேசம் அயர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த தகுதி சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத உள்ளது. இதில், இரு குழுவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும்.

தொடக்க நாளான இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. பி பிரிவில் உள்ள ஓமன் -பப்புவா நியூகினியா அணிகளுக்கு இடையிலான போட்டி மாலை 3.30 அளவில் நடக்க உள்ளது. வங்காளதேசம்- ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இரவு 7.30 நடக்க உள்ளது.
சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை (வருகிற 24-ந் தேதி, ஞாயிற்றுக்கிழமை) எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் துபாயில்இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
English Summary
t20 world cup men 1st match