#T20Worldcup: பட்லர் அதிரடி ஆட்டம்.. 180 ரன்கள் நியூசிலாந்து அணிக்கு இலக்கு.. வெற்றி யாருக்கு.? - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

டி20 உலக கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற கடும் போட்டி நிலவி வருகிறது. 

அதன்படி, இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தால் இந்த உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் மதியம் 1.30 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் பத்து ஓவர்களில் நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 77 ரன்களை எடுத்தது. அதன் பிறகு சிறப்பாக விளையாடிய பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்துள்ளது.

இங்கிலாந்து அணியில் சிறப்பாக விளையாடிய பட்லர்  43 பந்துகளில் 73 ரண்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 40 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்த அணி விளையாடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup England target of 180 against newzealand


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->