#T20Worldcup: அரையிறுதிக்கு தகுதி பெறுமா இங்கிலாந்து? நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பேட்டிங் தேர்வு.! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐசிசி 8வது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள நியூஸிலாந்து இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. அதன்படி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

டி20 உலக கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெற நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அதன்படி, இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தால் இந்த உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் காரணமாக இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற கடும் போராடும், அதேபோல் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அறிவு வாய்ப்பு உறுதி செய்ய நியூசிலாந்து அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அணி விவரம்

நியூசிலாந்து 11 வீரர்கள் :

ஃபின் ஆலன், டெவோன் கான்வே(w), கேன் வில்லியம்சன்(c), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்

இங்கிலாந்து 11 வீரர்கள் :

ஜோஸ் பட்லர்(w/c), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்

டி20 உலக கோப்பையில் இது வரை நேருக்கு நேர்

டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து இங்கிலாந்து அணிகள் இதுவரை 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 3 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 3 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup ENG vs NZ match England batting


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->