அவமானப்படுத்தப்பட்ட இடத்திலேயே வாழ்த்து மழை பொழிய வைத்த மாவீரன்! வைரல் வீடியோ! - Seithipunal
Seithipunal


2007 ஆம் ஆண்டுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. 17 ஆண்டுகள் கழித்து பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2011 க்கு பிறகு இந்திய அணி எப்போது ஒரு உலக கோப்பையை வெல்லும் என்று ஏக்கமும் முடிவுக்கு வந்துள்ளது.

கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் புயல் காரணமாக தாயகம் திரும்ப தாமதமான நிலையில் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர்.

பின்னர் பிரதமர் மோடியை சந்தித்த இந்திய அணி வீரர்கள் வாழ்த்து பெற்ற கையோடு அங்கிருந்து மும்பைக்கு வந்தடைந்தனர். 

மும்பைக்கு வந்த இந்திய வீரர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஒரு சிறப்பு பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் வான்கடே மைதானத்தில் இந்திய அணி வீரர்களை வரவேற்ற லட்சக்கணக்கான ரசிகர்கள், வாழ்த்து தெரிவித்து தனக்கது மகிழ்ச்சையை வெளிப்படுத்தினர். 

கோப்பையை வெல்ல முக்கிய திருப்பு முனையாக இருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு தங்களது நன்றியையும் ரசிகர்கள் கொடுத்தனர். 

மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஹர்திக் ஹர்திக் என முழக்கமிடம் ஒரு காணொளியும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யாவை இதே வான்கடே மைதானத்தில் வைத்து ரசிகர்கள் கடுமையான கிண்டல், கேலி செய்தது யாராலும் மறக்க முடியாது.

தற்போது அதே மைதானத்தில் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் ஹர்திக்.. ஹர்திக்... என்று அவரது பெயரை வாழ்த்தி கோஷமிட்டு உள்ளனர் ரசிகர்கள். 

அன்று அவமானம், இன்று பாராட்டு மழை! 

மனிதர்களுக்கு ஹர்திக் விஷயம் ஒரு நல்ல பாடம், இந்த உலகம் உன்னை சில நேரம் புகழும், சில நேரம் இகழும், இதில் எதை மனதில் ஏற்றுக்கொண்டாலும் நீ நீயாக இருக்க மாட்டாய். உன் கடமை, உன் இலக்கை நோக்கி சென்று கொண்டே இரு. நடப்பது நடக்கட்டும். முன்னோக்கி சென்று கொண்டே இரு. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup 2024 and IPL 2024 MI Wankhede stadium fans vs Hardik Pandya 


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->