தொடர்ச்சியாக 3 டக் அவுட் ஆன 6 ஆவது இந்தியர் சூர்யா குமார் யாதவ்! முதலிடம் யார் தெரியுமா? காத்திருக்கும் ஆச்சரிய தகவல்!  - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் நிலையில், மூன்றாவது போட்டியானது தொடரினை நிர்ணயிக்கும் போட்டியாக இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டி தொடரில் முதல் இரண்டு போட்டியிலும் சந்தித்த முதல் பந்தலையே டக் அவுட் ஆகி வெளியேறிய இந்திய  வீரர் சூர்யா குமார் யாதவ், இன்றைய சென்னை போட்டியிலும் தான் சந்தித்த முதல் பந்திலையே ஆட்டம் இழந்து வெளியேறினார். இதன் மூலம் அவர் இந்த போட்டி தொடரில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் ரன் எடுக்காமல் வெளியேறி இருக்கிறார். 

தொடர்ச்சியாக 3 டக் அவுட் ஆன ஆறாவது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை தன் பெயரில் சேர்த்து இருக்கிறார் சூரியகுமார் யாதவ். இப்பொழுது உங்கள் கேள்வி என்னவாக இருக்கும் அந்த முதல் ஐந்து இந்தியா பேட்ஸ்மேன் யார்? என்பதாக தானே இருக்கும்.

ஆம் உலகமே போற்றக்கூடிய கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படும் இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தான் அந்த முதல் இந்தியர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! அவர் தன்னுடைய முதல் சதத்தை அடிக்க சுமார் ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்ட நிலையில், 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 110 ரன்கள் அடித்து கன்னி சதத்தை பூர்த்தி செய்தார். 

அதன் பிறகு நடைபெற்ற மூன்று ஆட்டங்களிலும் செப்டம்பர் 17ஆம் தேதி ஸ்ரீலங்காவிற்கு எதிராகவும், அக்டோபர் 17 மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும், அக்டோபர் 20 மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும் 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக ரன் ஏதும் எடுக்காமல் தொடர்ச்சியாக டக்அவுட் ஆன மோசமான சாதனையை அவர் பெயரில்   வைத்திருந்திருக்கிறார். 

ஆனால் சூரிய குமார் யாதவ் போல, அவர் சந்தித்த முதல் பந்திலையே டக் அவுட் ஆகவில்லை. முதல் ஆட்டத்தில் இரண்டாவது பந்திலும், அடுத்த இரண்டு ஆட்டங்களில் நான்காவது பந்திலும் அவர் அவுட் ஆகி இருக்கிறார். அதன் பிறகு சச்சின் தான் கிரிக்கெட் விளையாடிய இறுதிவரை ஒரு போட்டிக்கு பின்னர் இரண்டாவது டக் அவுட் கூட தொடர்ச்சியாக ஆனது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்ற 4 இந்தியர்கள் யார் என தெரிந்து கொள்ள வேண்டாமா? ஆனால் அவர்கள் நான்கு பேருமே பவுலர்கள் என்பதால் பெரிதாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. சச்சினுக்கு பிறகு, அனில் கும்ப்ளே, ஜாகீர் கான், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 

சச்சின் டெண்டுல்கர் (1994)
அனில் கும்ப்ளே (1996)
ஜாகீர் கான் (2003-04)
இஷாந்த் சர்மா (2010-11)
ஜஸ்பிரித் பும்ரா (2017-2019)
சூர்யகுமார் யாதவ் (2023) 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suryakumar yadav went 3 consecutive ducks in ODI who is 6th person of india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->