தோனி ஓய்வு குறித்து மகிழ்ச்சியான செய்தி வெளியிட்ட சுரேஷ் ரெய்னா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அணை எம் எஸ் தோனி. இந்திய அணிக்காக ஒரு நாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பை உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

இதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனாலும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் இந்த சீசன் உடன் எம் எஸ் தோனி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் அனைத்து மைதானங்களிலும் இந்திய ரசிகர்கள் எம் எஸ் தோனி காண மைதானத்தை முழுவதும் மஞ்சள் படையாக ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தோனியுடன் நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடிய சுரேஷ் ரெய்னா தற்போது தோனியின் ஓய்வு குறித்து மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

தோனியின் ஓய்வு குறித்து சுரேஷ் ரெய்னா பேசியதாவது, தற்போது தோனி நல்ல உடல் நிலையில் இருப்பதால் கண்டிப்பாக அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியிலும் விளையாடுவார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் அவர்தான் வழிநடத்துவார் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suresh Raina speech MS Dhoni IPL retirement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->