டி20 உலக கோப்பையில் இந்த அணிதான் அபாயகரமான அணி - கௌதம் கம்பீர் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


20 ஓவர் உலக கோப்பை இன்று தொடங்கி முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இதில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 23ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் உலக கோப்பை குறித்து அந்தந்த அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டி20 உலக கோப்பை குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்த உலக கோப்பையில் இலங்கை அணி தான் மிகவும் அபாயகரமான அணியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது என்றும் அதனால் இந்த உலகக் கோப்பையில் இலங்கை அணி அனைத்து அணிகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கை அணி தற்போது நடைபெறும் முதல் சுற்று போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில்  இன்று நடைபெற்ற நமீபியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்துள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka most dangerous team in T20 World Cup gautham gambir


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->