ஸ்மிர்தி மந்தனாவின் ‘ஸ்பெஷல் இன்னிங்ஸ்’ - நிச்சயதார்த்தம் உறுதி, திருமண தேதியும் அறிவிப்பு!
Smriti Mandhanas Special Innings Engagement confirmed wedding date announced
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணியின் வெற்றிக்கு முதன்மை காரணிகளில் ஒருவராக இருந்த ஸ்மிர்தி மந்தனா, இந்த தொடரில் 9 ஆட்டங்களில் ஒரு சதம், இரண்டு அரைசதம் என மொத்தம் 434 ரன்கள் சேர்த்து தன்னுடைய திறமையை உலகுக்கு மறுபடியும் நிரூபித்தார்.
மராத்தியத்தின் 29 வயது நட்சத்திரம் தற்போது தனது வாழ்க்கையின் “இரண்டாவது இன்னிங்ஸ்”–ஐ தொடங்க தயாராக உள்ளார். நீண்டகாலமாக காதலித்து வந்த பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலுடன் மந்தனா சமீபத்தில் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தத்தை உறுதி செய்துள்ளார்.

வரும் 23ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது.இந்த சந்தோஷத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இவர்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் சக வீரர்கள், முன்னாள் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருமண முடிவு உறுதியாகியதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, ஸ்மிர்தி மந்தனா தனது இன்ஸ்டாகிராமில் இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ் ஆகியோருடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
English Summary
Smriti Mandhanas Special Innings Engagement confirmed wedding date announced