பாபர் ஆஸமின் உலக சாதனையை சமன் செய்த ஷுப்மன் கில்! இந்திய வீரர்களில் டாப்! - Seithipunal
Seithipunal


3 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் வரலாற்றில், அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பாபர் ஆஸமின் உலக சாதனையை இந்திய இளம் வீரர் ஷுப்மன் கில் சமன் செய்துள்ளார்.

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.

இதில், ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடர கைப்பற்றியுள்ள நிலையில், இன்று 3-வது ஒருநாள் ஆட்டம் இந்தூரில் நடைபெறுகிறது. 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்யவே, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு, 385 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் ரோகித் 101 ரன்கள் எடுத்தார், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான  ஷுப்மன் கில் 72 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

ஷுப்மன் கில்-க்கு இது 5-வது ஒருநாள் சதம். மேலும், கடந்த 4 ஒருநாள் ஆட்டங்களில் இரட்டைச் சதம் உள்பட மூன்று சதங்களை அடித்துள்ளார். 

மேலும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் (360) எடுத்த வீரர் என்கிற பாபர் ஆஸமின் சாதனையை ஷுப்மன் கில் சமன் செய்துள்ளார். 

சர்வதேச 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் வீரர்கள் பட்டியல் :

360 - பாபர் ஆஸம் vs மே.இ. தீவுகள்
360 - ஷுப்மன் கில் vs நியூசிலாந்து

349 - இம்ருல் கைஸ் vs ஜிம்பாப்வே
342 - குயிண்டன் டி காக் vs இந்தியா
330 - மார்டின் கப்தில் vs இங்கிலாந்து 

இதில், இந்திய வீரர்களின் பட்டியலில் ஷுப்மன் கில் முதலிடத்தில் உள்ளார்.

360 - ஷுப்மன் கில் vs நியூசிலாந்து, 2023
357 - விராட் கோலி, ஆசியக் கோப்பை, 2012
283 - ஷிகர் தவன் vs இலங்கை, 2014
283 - விராட் கோலி vs இலங்கை, 2023
273 - ரோஹித் சர்மா vs இலங்கை, 2014


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shubman Gill IND vs NZ new record 2023


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->