தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: மீண்டும் ஓரம் கட்டப்படும் சஞ்சு சாம்சன்..? - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 02 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது. 

இதைத்தொடர்ந்து 03 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த 30-ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, ராஞ்சியில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 02-வது போட்டி ராய்ப்பூரில் நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

 

இந்நிலையில் இந்த தொடர் முடிந்தவுடன் இரு அணிகளுக்கு இடையேயான 05 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காயம் காரணமாக சுப்மன் கில் அணியில் இடம் பெறுவது சந்தேகம்தான். அத்துடன், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, ரியான் பராக் ஆகியோர் அணியில் இடம் பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அணியில் இடம் பிடிக்கும் நிலையில், சஞ்சு சாம்சனை வழக்கம் போல கழற்றி விட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் அவர் அணியில் இடம் பெறுவதே ஒரு கேள்வி குறியாக யுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sanju Samson to be dropped again for the T20 series against South Africa


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->