டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள்.. நியூசிலாந்து வீரர் சாதனையை சமன்செய்தார் ரோஹித் ஷர்மா.! - Seithipunal
Seithipunal


 டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 172 சிக்சர்கள் அடித்து நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்திலின் சாதனையை ரோகித் சர்மா சமன்செய்தார். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா 9 பந்துகளில் 1 சிக்சர், 1 பவுண்டரி அடித்து 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்.

இதையடுத்து ரோகித் சர்மா 172 சிக்சர்களுடன் டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த மார்ட்டின் குப்திலின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 124 சிக்சர்களுடன் 2வது இடத்தில் உள்ளார். 3வது இடத்தில் இங்கிலாந்து அணியின் மோர்கன் (120 சிக்சர்கள்), ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் (117 சிக்சர்கள்) ஆகியோர் உள்ளனர்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இன்னும் 2 போட்டிகள் உள்ளதால் டி20 போட்டியில் ரோகித் சர்மா அதிக சிக்சர்கள் விளாசி முதலிடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rohit Sharma equalise most sixers in T20 Martin Guptill


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->