டெஸ்ட் கிரிக்கெட்டில் குருவின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்.!!
rishabh pant breaking ms dhoni record
இந்திய அணி தென்ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இரண்டாவது நாள் மழையின் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

மூன்றாவது நாள் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 327/10 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அடுத்தடுத்து, தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து 197/10 ரன்னுக்கு அவுட் ஆனார். அதிகபட்சமாக முகம்மது ஷாமி 5 விக்கெட்டை வீழ்த்தினார். பும்ரா மற்றும் தாகூர் 2 விக்கெட்களை வீழ்த்தினர். சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி உள்ளது. தற்போது இந்தியா 146 ரன் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலமாக வரும் பேட்ஸ்மேனை 101 முறை அவுட் செய்துள்ளார். இதனை அவர் 26 போட்டிகளில் செய்துள்ளார். இதற்கு முன்னதாக முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்எஸ் தோனி 36 போட்டிகளில் இந்த சாதனையை படைத்தார். தற்போது அந்த சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
English Summary
rishabh pant breaking ms dhoni record