கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், சமாஜ்வாதி எம்.பி.,பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம் வதந்தியா..? - Seithipunal
Seithipunal


பிரபல கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்,(27வயது). சமாஜ்வாதி எம்.பி.,பிரியா சரோஜ்யை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருக்கும்  நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உ.பி., மாநிலம் அலிகர் நகரை சேர்ந்தவர் ரிங்கு சிங். இடது கை பேட்ஸ்மேனான இவர், கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார்.  ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாடி வருகிறார். 

அத்துடன், டி-20 தொடரில் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். வரும் 22ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியில் இடம் இவர் பெற்றுள்ளார்.

ரிங்கு சிங், திருமணம் செய்யும் பிரியா சரோஜ், வாரணாசியை சேர்ந்தவர். உ.பி.,யின் மச்லீஸ்வர் தொகுதியில் சமாஜ்வாதி சார்பில் தேர்வு செய்யப்பட்டவர். 

25 வயதில் வெற்றி பெற்ற இவர், லோக்சபாவில் இளம் வயது எம்.பி.,க்களில் ஒருவர் என்ற பெருமை பெற்றுள்ளார். உச்சநீதிமன்றத்தில் ட் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை டுபானி சரோஜ் அவரும் மூன்று முறை எம்.பி., ஆக இருந்தவர். தற்போது உ.பி., எம்.எல்.ஏ., ஆக உள்ளார்.ரிங்கு சிங் மற்றும் ப்ரியா சரோஜிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

ஆனால், பிரியா சரோஜின் தந்தை துஃபானி சரோஜ், ரிங்கு சிங்குடன் தனது மகள் பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக பரவும் செய்திகள் வதந்திகள். ஆதாரமற்றவை என்று கூறியுள்ளார். வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம். அவற்றில் எந்த உண்மையும் இல்லை," என்று அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rinku Singh And Priya Saroj Not Engaged


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->