அரை சதம் அடித்த படிக்கல்! அதிரடி ஜோடி களத்தில்! RCB vs SRH மேட்ச் அப்டேட்!  - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் தொடங்கிய 13வது ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஆடி வருகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள், ஆரோன் பின்ச் - தேவ்தத் படிக்கல் ஜோடி நிதானமாகவும், அதே சமயத்தில் அதிரடியாகவும் ஆடினர்.

தேவ்தத் படிக்கல் 42 பந்துகளில் 8 ஃபோர் அடித்து 56 ரன்கள் எடுத்து போது, விஜய் சங்கர் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். இதேபோல் மறுமுனையில் ஆடிவந்த ஆரோன் பின்ச் 29 ரன்கள் எடுத்திருந்தபோது, அபிஷேக் சர்மா பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.

இப்போது, களத்தில் விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்துள்ளது.பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தற்போது வரை 15.5  ஓவர்களுக்கு,  123 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. 3 விக்கெட்டுகள் விழுந்துள்ளது.

பெங்களூர் அணியில் ஆரோன் பிஞ்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, டி வில்லியர்ஸ், டுபே, வாஷிங்டன் சுந்தர், ஜோஷ் பிலிப்பே, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, டெல் ஸ்டெயின், சாஹல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில், டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ், மணிஷ் பாண்டே, விஜய் சங்கர், மிட்செல் மார்ஷ், பிரியம் கார்க், அபிஷேக் சர்மா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, டி. நடராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

RCB vs SRH match update


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->