ஆர்சிபி அணி கடைசி இடத்தில தான் இருக்கு!! ஆட்டத்தை விட்டு இன்னும் போகல!! இருக்க கடைசி வாய்ப்பு?!  - Seithipunal
Seithipunal


பிளே ஆஃப் சுற்றுக்கள் வாய்ப்புகளை இழந்து பெங்களூரு அணி தற்பொழுது நிற்கிறது. இதற்கு காரணம் ஆர்சிபி அணி பெற்ற தோல்விகளே காரணம். ஆனால், வாய்ப்புகளை இழந்து நிற்கிறது என கூறுவதை விட மிக மிக குறைவான வாய்ப்பு என்றே கூறலாம். 

ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தில் இருக்கின்றது. இதுவரை 47 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இன்னமும் 9 போட்டிகளே மிச்சம் உள்ளது. இரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கள் வாய்ப்பை உறுதி செய்து விட்டது என்றே கூறலாம். 

டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் சிஎஸ்க்கே அணி தகுதி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியும் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது. ஆனாலும் இன்னும் வெற்றிகரமாக முழுமை பெறவில்லை. ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் கடுமையாக போட்டியிட வேண்டிய நிலையில் உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் பிளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்றால், இருக்கிறது என்று கூறலாம். ஆனால், மிக மிக குறைவு. 

எப்படியென்றால், பின்வரும் முறையில் ஐபிஎல் போட்டிகளின் வெற்றி தோல்வி இருந்தால் இது சாத்தியம். ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் ஹைதராபாத்-பஞ்சாப் போட்டியில் பஞ்சாப் அணியும்,  ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் - ராஜஸ்தான் போட்டியில் பெங்களூர் அணியும், மே 2 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - ஹைதராபாத் : மும்பை அணியும், 

மே 3ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில்  பஞ்சாப் - கொல்கத்தா : கொல்கத்தா அணியும், மே 4 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி - ராஜஸ்தான் : டெல்லி அணியும், மே 4 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் - ஹைதராபாத் : பெங்களூர் அணியும், மே 5 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் - சிஎஸ்கே : சிஎஸ்கே அணியும், மே 5 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - கொல்கத்தா : மும்பை அணியும் வெற்றி பெற்றால் பெங்களூரு அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கும். 

இப்படி வெற்றிக்கு விகிதம் இருந்தால் பெங்களூர், பஞ்சாப், கொல்கத்தா ஆகிய அணிகள் சமபுள்ளியில் இருக்கும். அப்போது நெட் நெட்டின் அடிப்படையில் இவற்றைவிட பெங்களூரு அணி முன்னிலையில் இருக்கும். எனவே வாய்ப்பை பெரும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rcb team has one chance to enter play off


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal