தோல்வியை தழுவிய லக்னோ - ராஜஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட் .! - Seithipunal
Seithipunal


நேற்று நடைபெற்ற நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. லக்னோ சார்பில் சிறப்பாக பந்துவீசிய நவீன் உல் ஹக் இரண்டு விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷத் கான் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி தோல்வியை தழுவியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் இரண்டாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

மேலும், மூன்று மற்றும் நான்காவது இடத்துக்கு சென்னை, ஐதராபாத், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட அணிகள் இடையே போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajasthan team going to play half in ipl 2024


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->