கொரோனாவுக்கு சவால் விட்ட பி.வி.சிந்து.! களமிறங்கிய மத்திய அமைச்சர்.! வீடியோ வைரல்.!  - Seithipunal
Seithipunal


இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொரோனா நோய் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். 

அந்த வீடியோவில் பிவி.சிந்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்று தெரிவித்து எவ்வாறு சுத்தமாக கைகழுவ வேண்டும் என்பதை செயல்விளக்கம் காட்டியிருக்கின்றார். 

இது போல விழிப்புணர்வு வீடியோவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா ஆகியோரும் வெளியிட வேண்டும். என்னுடைய இந்த சவாலை ஏற்க வேண்டும் என்று பதிவிட்டு இருக்கிறார். 

இந்த சவாலை ஏற்ற மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் தானும் கை கழுவுவது போல வீடியோவை காட்சிப்படுத்தி டுவிட்டரில் வெளியிட்டு இருக்கின்றார். அதன் பின்னர் அவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, பிரபல பாடகர் அதனன் சாமி ஆகியோருக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pv sindhu challenge to minister and sports man


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->