#KKR vs PBKS : 262 இலக்கை 18.4 ஓவர்களில் அடித்து வெற்றி பெற்றது பஞ்சாப்.!!
Punjab team won the match
17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 42வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரண்களை குவித்தது. போட்டியின் இரண்டாம் பாதியில், 262 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 262 ரன் அடித்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 3 வெற்றியும் 6 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றியையும் 3 தோல்வியும் பெற்று புள்ளி பட்டையில் 2வது இடத்தில் உள்ளது.
English Summary
Punjab team won the match