நாளைய போட்டியில் களமிறங்க போவது யார்?! முக்கிய வீரர் விலகளால் என்ன முடிவு எடுக்கும் இந்தியா?! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில், இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதல் 2 போட்டிகள் நடந்தது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இந்தியா 317 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. 

அகமதாபாத்தில் நடந்த 3-வது டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அதே அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான அணி இந்த டெஸ்டை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றிவிடும். அதேபோல டிரா செய்தாலே ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா நுழையும், ஆனால் தோல்வியை சந்திக்க கூடாது. 

இந்த நிலையில் நாளைய போட்டியில் பும்ரா இல்லை என்பதால் அவர் இடத்தில உமேஷ் யாதவ் இறங்குவாரா? அல்லது முகம்மது சிராஜ் இறங்குவாரா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

அணி விபரம் : ரோஹித் சர்மா, சுப்மான் கில், சேடேஷ்வர் புஜாரா, விராட் கோஹ்லி , அஜிங்க்யா ரஹானே, ரிஷாப் பந்த் , ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்/ சிராஜ்

இங்கிலாந்து அணி : டோம் சிபிலி, ஜாக் கிராலி, ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப், பென் ஃபோக்ஸ், டோம் பெஸ், ஜாக் லீச், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேம்ஸ் ஆண்டர்சன்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

probable eleven for 4th test


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->