புரோ கபடி லீக் அட்டவணையில் திடீர் மாற்றம் - என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் புரோ கபடி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும். அந்த வகையில், 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. 

முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டு இரவு எட்டு மணியளவில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில், ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்த லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான புரோ கபடி லீக்கின் 3-வது மற்றும் 4-வது கட்ட லீக் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 3-வது கட்ட சுற்று ஆட்டம் அக்டோபர் 12-ந் தேதிக்கு பதிலாக இரண்டு நாள் முன்னதாக 10-ந் தேதி முடிவடைகிறது. 

இதேபோல் 4-வது சுற்று ஆட்டம் அக்டோபர் 13-ந் தேதிக்கு பதிலாக 2 நாள் முன்கூட்டியே 11-ந் தேதி தொடங்குகிறது. இதனால் அக்டோபர் 11-ந் தேதி மற்றும் 12-ந் தேதி சென்னையில் நடக்க இருந்த ஆட்டங்கள் டெல்லிக்கு மாறுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pro kabbadi league shedule change


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->