காரைக்குடி சோகம்; சுமைதூக்கும் தொழிலாளி மர்ம மரணம்; போதையில் தடுமாறி விழுந்து இறந்தாரா..? அல்லது கொலையா..? குடும்பத்தினர் குற்றசாட்டு குறித்து போலீசார் விசாரணை..! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி பாண்டி. 49 வயதாகவும் இவர் இரு தினங்களுக்கு முன்பு பாதரக்குடியில் உள்ள டாஸ்மாக்கிற்கு மது வாங்க சென்றுள்ளார். ஆனால், அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து  அவரை அவரதுகுடும்பத்தினர் தேடிச் சென்றுள்ளனர். 

அப்போது, பாதரக்குடி அருகேயுள்ள கண்மாயில் பின் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் பாண்டிஉயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக இது குறித்து குன்றக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். 

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பாண்டியை யாரோ கொலை செய்து விட்டதாகவும், குற்றவாளிகளைப் பிடிக்காமல் போலீசார் தாமதப்படுத்துவதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உயிரிழந்த பாண்டியின் சகோதரர் முத்துராமன் தெரிவிக்கையில்; 

தனது சகோதரர் பாண்டி இறந்து கிடந்த இடத்தில் அவரது செல்போனை காணவில்லை. அந்த போனுக்கு தொடர்பு கொண்ட போது, அழைப்பை வேறொருவர் எடுத்து, செல்போனை பாண்டி 500 ரூபாய்க்கு அடகு வைத்திருப்பதாகக் கூறியதாகவும், தான் பணத்தை தருவதாகக் கூறியதும், கோவலூருக்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு அந்த நபர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த நபரைப் பிடிப்பதற்காக காவலர் ஒருவருடன் உயிரிழந்த பாண்டியின் சகோதரர் சென்ற போது குறித்த நபர் அங்கு வரவில்லை. மீண்டும் அந்த நபரை தொடர்பு கொண்டபோது, அமராவதி புதூரில் இருப்பதாக கூறியிருக்கிறார். அத்துடன், இரவாகி விட்டதால், அங்கு செல்ல வேண்டாம். காலைக்குள் அந்த நபரைப் பிடித்து விடுகிறோம் என்று போலீசார் கூறியிருக்கின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முத்துராமன் பரபரப்பு குற்றசாட்டை தெரிவித்துள்ளார். 

இதனால் தனது சகோதரனை யாரோ அடித்துக் கொலை செய்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட கொலையாளிகளை போலீசார் பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  ஆனால், இந்த சம்பவம் குறித்து போலீசார் வேறுவிதமான ஒரு தகவலைக் கூறியுள்ளனர்.

அதாவது, நண்பர்களுடன் மது அருந்தச் சென்ற பாண்டி, கீழே தடுமாறி விழுந்ததில் பின் தலையில் அடிபட்டு இறந்ததுபோல் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார். போலீசார் உடற்கூராய்வு முடிவுக்கு பின்னரே போதையில் தடுமாறி விழுந்து இறந்தாரா..? அல்லது கொலையா..? என்பது தெரியவரும்’ என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police investigating mysterious death of Karaikudi load carrier


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->