புள்ளி பட்டியலில் பிக் ஜம்ப் செய்த கொல்கத்தா! 7 ஆவது இடத்தினை தக்கவைத்த சென்னை!
points table after 54th league match in IPL2020
இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் முதல் போட்டியில் சென்னை வெற்றி பெற, இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடரில் இருந்து மூணாவது அணியாக வெளியேறியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் இருந்த நிலையில், இந்த போட்டிக்கு பின்னர் 14 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் கொல்கத்தா நீடிக்கிறது .
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணி கேப்டன் மார்கன் அரைசதம் விளாச, கோல்கட்டா அணி 20 ஓவரில் 191 ரன்கள் குவித்தது.
ராஜஸ்தான் அணி அதிரடியாக ரன்கள் குவிக்க முயற்சித்து, பேட்ஸ்மேன்கள் தவறான ஷாட்களை அடித்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக பட்லர் 35 ரன்களும், டிவாட்டியா 31 ரன்களும் அடிக்க ராஜஸ்தான் அணி 131 ரன்களை மட்டுமே அடித்தது. இதன்மூலம் கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
இந்த நிலையில் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்த கொல்கத்தா 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி 7 ஆவது இடத்தினை தக்கவைத்துள்ளது. ராஜஸ்தான் அணி 6 ஆவது இடத்தில் இருந்து எட்டாவது இடத்திற்கு சென்றுள்ளது.
தற்போதைய நிலையில் மும்பை ஹைதராபாத்தை வீழ்த்திவிட்டால் கொல்கத்தா நேரடியாக அடுத்த சுற்றுக்குள் சென்று விடும். ஒருவேளை ஹைதராபாத் வெற்றி பெற்றால், டெல்லி பெங்களூர் போட்டியில் தோற்கும் அணி மோசமான தோல்வியை பெற்றால் கொல்கத்தா அடுத்த சுற்றுக்குள் சென்று விடும்.
English Summary
points table after 54th league match in IPL2020