சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகள் நடத்த அனுமதி..! - Seithipunal
Seithipunal


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.

கடந்த வருடம் ஆர்.சி.பி. அணி 18 வருடங்களுக்கு பின்னர் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அதனை தொடர்ந்து,  வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரேநேரத்தில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வருடம் ஆர்சிபி அணிக்கு சின்னசாமி மைதானம் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்திருந்தது.

இந்நிலையில் ரசிகர்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக மைதானத்தில் 300 முதல் 350 ஏஐ கேமராக்கள் பொருத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஆர்சிபி அணி முறையாக பரிந்துரை செய்துள்ளதோடு, இதற்கான செலவு 4.5 கோடி ரூபாயை தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது.

ஆனால், இந்த முறை ஐ.பி.எல்.போட்டியை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்குமா? என்பது கேள்விக்குறியாக இருந்து நிலையில், தற்போது அதற்கும் கிடைத்துள்ளது. அத்துடன், அங்கு சர்வதேச போட்டிகளை நடத்தவும் அனுமதி கிடைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Permission granted to host IPL matches and international matches at the Chinnaswamy Stadium


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->